செக்யூரிட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ன செய்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் வீடியோ

செக்யூரிட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ன செய்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் வீடியோ


Indian women cricketer dancing with security

ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியும் பங்கேற்றுள்ளது.

தொடரின் முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. மேலும் இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது.

Jemimah rodrigues

மூன்றாவது போட்டியில் இன்று இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. மெல்பர்னில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் கலந்துகொள்ள இந்திய அணியின் வீராங்கனைகள் மைதானத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது இந்திய அணியின் ஜேம்ஸ் ரோட்ரிஹியூஸ் அங்கு பணியாற்றும் பெண் காவலாளி ஒருவருடன் நடனமாடியபடியே சென்றுள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள அந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.