ஆத்தாடி ஆத்தே... என்னா குத்து..! ஆட்டம் முடிந்ததும் மரண குத்து போட்ட இந்திய வீரர்கள்.! வைரல் வீடியோ

ஆத்தாடி ஆத்தே... என்னா குத்து..! ஆட்டம் முடிந்ததும் மரண குத்து போட்ட இந்திய வீரர்கள்.! வைரல் வீடியோ


indian-team-player-dance-after-won-the-match

ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது . முதல் இரண்டு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 3 வது போட்டியில் மோதியது. நேற்றைய ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் ஷூப்மான் கில் முதல் சதம் அடித்து 130 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் வெற்றியயை கொண்டாடும் விதமாக இந்திய அணி வீரர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.