விளையாட்டு WC2019

போட்டியின் முடிவில் 87 வயது ரசிகைக்கு இந்திய வீரர்கள் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

Summary:

Indian skippers got blessings from 87 yearold fan

உலக கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின இந்த போட்டியில் 87 வயதான மூதாட்டி ஒருவர் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் இருந்து கொண்டே அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் 87 வயதான பாட்டி சாருலதா படேல். ஆட்டத்தின் நடுவே வாயில் சிறுவர்களைப் போல ஒரு ஊதுகுழலை வைத்துக்கொண்டு இந்திய அணிக்காக ஆரவாரம் செய்தவர் தான் இந்த பாட்டி.

ஆட்டத்தின் நடுவிலேயே இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த பாட்டியின் ஆரவாரத்தில் மயங்கினர். எனவே ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அந்த பாட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன்பின்பு பேசிய அந்த பாட்டி இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும். நான் கடவுளிடம் இந்திய அணிக்காக வேண்டிக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.


Advertisement