அவரும்மா தமிழ் பேசுறாரு..! போட்டியின்போது தமிழில் பேசிய இந்திய வீரர்கள்.. பேசுனது யாரெல்லாம் தெரியுமா..?

இரண்டாது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக


Indian players Virat kohli and pant speaks in Tamil

இரண்டாது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் மிக சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் பேட்டிங்கிலும் சதமடித்து அசத்தினார்.

india vs england

இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, அஸ்வின் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை உற்சாகப்படுத்தும்விதமாக, இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி வேற லெவல், வேற லெவல் என தமிழில் கூற, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அதனை தொடர்ந்து, நல்லா இருக்கு. வேற லெவல் என தமிழில் கூற முயற்சி செய்தார்.

இந்த ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகி இருந்தநிலையில், தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.