சாதனை வெற்றியை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடும் இந்திய வீரர்கள்! வைரலாகும் வீடியோ

Indian players celebrating australia test victory


Indian players celebrating australia test victory

சிட்னியில் நடைபெற்று வந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே 2-1 என்று தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி தட்டிச் சென்றார்.

test match

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து நேற்று டிக்ளேர் செய்தது. புஜாரா 193, பண்ட் 159, ஜடேஜா 81, விஹாரி 77 ரன்கள் எடுத்தனர். 

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்களை எடுத்தது. பாலோவ் ஆன் ஆன ஆஸ்திரேலியா அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது.

test match

ஐந்தாவது நாள் ஆட்டம் மழை குறுக்கிட்டதால் நடைபெறவில்லை. எனது இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி தட்டிச் சென்றார்.

இந்த சாதனை வெற்றியை இந்திய அணியினர் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். இதன் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.