பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
சஹால், குல்தீப் பந்துவீச்சை எதிரணி கணித்தால் கதையே வேற எச்சரிக்கும் அஸ்வின்.

இந்திய அணியின் வீரர் அஸ்வின் அணியில் தனக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்தும் சஹால், குல்தீப் பந்து வீச்சு பற்றியும் தனது கருத்தை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற அஸ்வின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
சஹால், குல்தீப் போன்ற இளம் வீரர்களின் வருகைக்கு பின்னர் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களின் தொடர் காயங்களினால் ஜடேஜாவுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க தியோடர் ட்ராபி தொடரில் பங்கேற்று தனது திறமையை மீண்டும் நிரூபிக்க கடுமையாக போராடி வருகிறார். இந்த நிலையில் அவர் கூறும்போது:
ஒருநாள், டி-20 போட்டிகளில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. வாழ்க்கை என்பது சுழற்பந்துவீச்சு போலத்தான், எல்லாருக்கும் அந்த முறை வரும். நேரத்தை பொறுத்து அது மாறுபடும். தற்போது இந்திய அணி விமர்சங்களை மற்றும் கருத்துக்களை பொறுத்து தான் உள்ளது.
என்னைப்பொறுத்த வரையில் வெற்றியாளராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்யும் எல்லாம் சரி, அதுவே சொதப்பலாக இருந்தால், கருத்துக்கள் துவங்கிவிடும். அதற்கு பதில் அளிக்க விரும்புவார்கள்.
உதாரணமாக விக்கெட் எடுக்க முயற்சிக்கும் போது, ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ரன்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது விக்கெட் எடுக்க வேண்டும் என்று விமர்சித்தனர். தற்போது குல்தீப், சகால் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களால் தற்போது பேட்ஸ்மேன்களை ஏமாற்ற முடிகிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் அவர்களை கணித்துவிட்டால் அப்பறம் கதையே வேறு.’ என்றார்.