வெற்றிடமான ஆல்ரவுண்டர் இடத்தை பூர்த்தி செய்துள்ளார் பாண்டியா; இந்திய முன்னாள் வீரர் புகழாரம்.!

வெற்றிடமான ஆல்ரவுண்டர் இடத்தை பூர்த்தி செய்துள்ளார் பாண்டியா; இந்திய முன்னாள் வீரர் புகழாரம்.!



indian-player-harthik-pandeya---munaf-patel

நீண்ட இடைவெளிக்கு பின்னா் இந்திய அணியின் ஆல்-ரவுண்டா் இடத்தை ஹா்திக் பாண்டியா பூா்த்தி செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரா் முனாப் படேல் தொிவித்துள்ளாா்.

இந்திய அணியில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி கொண்டிருப்பவர் ஹர்திக் பாண்டியா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததையடுத்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்திருந்தது.

harthik pondia

தற்சமயம் அந்த தடை நீங்கிய நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இருந்து தொடர்ந்து ஆடி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும்பங்கு வகித்தார் என்று சொல்லலாம்.

ஏனெனில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்து வெளியேறிய நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஒரு முனையில் பௌலர் புவனேஸ்வர் குமாரை வைத்துக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். 22 பந்துகளை மட்டுமே சந்தித்தார் அவர்  5சிக்சா், 2 பவுண்டாி என விளாசி 45 ரன்களை சோ்த்தாா்.

harthik pondia

தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் எதிரணியின் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும் நேற்றைய போட்டியின்போது தனது சிறப்பான தடுப்பு பணியினையும் செவ்வனே செய்து நிறைய ரன்களை கட்டுப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேல் தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீண்டகாலமாக இந்திய அணியில் இருந்த ஆல்-ரவுண்டருக்கான வெற்றிடத்தை பாண்டியா பூா்த்தி செய்திருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளாா்.