ஒலிம்பிக்: இந்தியாவின் தேசிய விளையாட்டில் கெத்து காட்டும் இந்திய அணி.! இன்றைய ஆட்டத்தில் மிரண்டு போன ஸ்பெயின் அணி.!

ஒலிம்பிக்: இந்தியாவின் தேசிய விளையாட்டில் கெத்து காட்டும் இந்திய அணி.! இன்றைய ஆட்டத்தில் மிரண்டு போன ஸ்பெயின் அணி.!


indian hockey team won spain team

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுன்னர். டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான 3ஆவது லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. 

hockey

 ஒலிம்பிக்  தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியில் 2-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இன்றைய ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில் ருபிந்தர்பால் சிங் கோல் அடித்தார். இதனையடுத்து ருபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.