நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா.! ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய அணி.!

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா.! ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய அணி.!


indian-hockey-team-qualify-for-quarterfinals

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுன்னர். டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான 3ஆவது லீக் போட்டியில் இந்திய ஆடவர் 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. 

hockey team

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற அர்ஜென்டினாவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. இந்தியாவின் வருண் குமார், விவேக் சாகர் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.