ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
இந்திய அணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! இந்த நூற்றாண்டில் இதுவே முதல்முறை.! இந்திய ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளான நேற்று அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்த 244 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி நேற்று முதல் இன்னிங்சை துவக்கியது. ஆஸ்திரேலிய அணி 72.1ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தநிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இந்தியா. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் இந்தியா 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து டிக்ளர் செய்தது. இதனால், 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது, இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.