ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு தடை; பிசிசிஐ அதிரடி நடவடிக்கை.!

ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு தடை; பிசிசிஐ அதிரடி நடவடிக்கை.!


indian-cricket-players---harthik-bandia-kl-rahul

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுலுக்கு 2 போட்டிகளில் தடைவிதிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டியா மற்றும் ராகுல் இருவரும் பெண்களின் வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாகவும் இனவெறியை தூண்டும் வகையிலும் கருத்துகளை கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

harthik pondia

இந்த விவாகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துக்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு வகையிலும் யாருடைய உணர்ச்சியையும் காயப்படுத்த நினைக்கவில்லை” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 

harthik pondia

“நிகழ்ச்சியில் இரு வீரர்கள் கூறிய கருத்துக்களை இன்றைய பத்திரிகைகளில் நான் பார்த்தேன். இவர்களை மன்னிக்க முடியாது. நான் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்பதால் தண்டனையை பரிந்துரைக்க நிர்வாகக்குழு உறுப்பினர் டயானவிடம் கூறியுள்ளேன். இருவருக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை கொடுக்கப்படும் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். 

ஜனவரி 12 அன்று தொடங்கவிருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளில் பாண்ட்யா மற்றும் ராகுல் பங்கேற்க உள்ளனர். தடைவிதிக்கப்பட்டால், இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.