இந்தியா விளையாட்டு

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்தார் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்!

Summary:

indian cricket palyer married his lover


ஆந்திராவை சேர்ந்த இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி, கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடந்த போட்டியின் போது அறிமுகமானார் ஹனுமா விஹாரி.

அந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல ஐபில் போட்டிகளிலும் அதிரடியாக ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியும், அழகுக்கலை நிபுணருமான பிரீத்திராஜ் எருவாவை நேற்று திருமணம் செய்துகொண்டார் ஹனுமா விஹாரி. உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹனுமா விஹாரி, "உன் முகத்தில் இருக்கும் இந்த சிரிப்பு எப்பொழுதும் தொடரும் என உறுதியளிக்கிறேன். உன்னை விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 


Advertisement