சூறாவளி போல் சுழன்று அடித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்.! சுருண்டு விழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி.!

சூறாவளி போல் சுழன்று அடித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்.! சுருண்டு விழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி.!


india won t20 series

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்தநிலையில் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடி  20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வலையில் சிக்கினார். அக்சர் வலையில் ஹோல்டர்(0), புரூக்ஸ்(13), டேவோன் தாமஸ்(10) என ஆட்டமிழந்தனர். குல்தீப்பிடம் கேப்டன் பூரன்(3), டிரேக்ஸ்(1), ஓடியன் ஸ்மித்(0) அவுட்டாகினர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவரில் 100 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கனக்கில் கைப்பற்றியது.