இந்திய அணியை நடுங்கவைத்த ஹாங்காங் அணி!. இறுதியில் விரட்டி வெளுத்த இந்திய அணி!.

இந்திய அணியை நடுங்கவைத்த ஹாங்காங் அணி!. இறுதியில் விரட்டி வெளுத்த இந்திய அணி!.



india won hong kong team in asian match


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி  இந்தியா -ஹாங்காங் அணிகளுக்கு இடையே நேற்று துபாயில் நடைப்பெற்றது. நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களமிறங்கினர். ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 127 ரன்களும்,  ராயுடு 60 ரன்களும், தினேஷ் கார்த்திக் 33 ரன்களும் எடுத்தனர்.  இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை எடுத்தது. 

Indian cricket team286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங் அணியின்  துவக்க மட்டையாளர்கள் விக்கெட் கொடுக்காமல் நீண்ட நேரம் இந்திய அணியை திணறடித்தனர். துவக்க ஆட்ட ஜோடி 174 ஓட்டங்களை குவித்து அசத்தியது. 

இறுதியில் ஹாங்காங் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் எடுத்தது. 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முட்டி மோதி வெற்றி பெற்றது .சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.