அதிரடி காட்டிய இங்கிலாந்து.! சோலியை முடித்த இந்திய அணி.! வேற லெவல் ஆட்டம்.!

அதிரடி காட்டிய இங்கிலாந்து.! சோலியை முடித்த இந்திய அணி.! வேற லெவல் ஆட்டம்.!


india won engaland in first one day

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், T20, ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது.  டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று  நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. 

இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோஹித் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராட்  கோலி 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதிவரை ராகுல் 62 ரன்களுடனும், குர்னால் பாண்டியா 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள்  எடுத்தது.

cricket

இதனையடுத்து, 318- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டாவ் 94 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 42.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த  இங்கிலாந்து அணி 251 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி  66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் கிருஷ்னா 4 விக்கெட்டுகளையும், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.