
india vs w.indies 2nd oneday
இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தோ்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான ரோகித் ஷா்மா 4 ரன்களிலும், ஷிகா் தவான் 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா்.
அதன்பிறகு களமிறங்கிய அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை விராட் கோலியுடன் இணைந்து வெளிப்படுத்தினார். கேப்டன் விராட் கோலி இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். கோலி இன்றைய ஆட்டத்தில் 81 ரன்கள் எடுத்த நிலையில் குறைந்த போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா்.
There is no stopping this fella @imVkohli, whaddaplayaaa 🔥🔥 pic.twitter.com/4Hkt55TsHF
— BCCI (@BCCI) October 24, 2018
முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கா் 259 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் விராட் கோலி தனது 205வது போட்டியிலேயே இந்த சாதனையை படைத்தார். சிறப்பாக ஆடி வந்த அம்பத்தி ராயுடு 73 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
King Kohli 👑 pic.twitter.com/tNIJxt62ae
— BCCI (@BCCI) October 24, 2018
அதன்பிறகு ஆடவந்த தோனி 20 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட்டும் 17 ரன்களில் வெளியேறினார். மேலும், இந்த போட்டியில் 157 ரன்கள் அடித்தார் கோலி. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, இந்தியா 321 ரன்கள் எடுத்தது.
பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகளின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட தவங்கினர். ஆனால் சமி வீசிய 7வது ஓவரில் பவல் 18 ரன்னிலும் குல்தீப் வீசிய 10வது ஓவரில் ஹேம்ராஜ் 32 ரன்னிலும் வெளியேறினர். முதல் 10 ஓவர்களில் 64 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது மே.இ.தீ அணி.
பின்னர் வந்த சாமுவேல் 13 ரன்னில் 12வது ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சென்ற ஆட்டம் போல் சிறப்பாக ஆடிய ஹெட்மயர் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 94 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் வெளியேறினார். இவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்சர்களை விளாசினார். 32வது ஓவரில் அவர் வெளியேறும் போது அணியின் எண்ணிக்கை 221 ஆக இருந்தது.
மீதமுள்ள 18 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே தேவை. 38வது ஓவரில் பவல் 18 ரன்னில் வெளியேறினார். மற்றொரு முனையில் நிதானமாக ஆடி அரைசதம் அடித்த ஹோப்புடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஹோல்டர். ஹோல்டர் சற்று தடுமாற அணியின் ரன் விகிதம் குறைய துவங்கியது. ஹோப் சதமடித்தார்.
கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது மே.இ.தீ அணிக்கு. சாஹல் வீசிய 48வது ஓவரின் 2வது பந்தில் ஹோல்டர் ரன் அவுட்டானார். அந்த ஓவரை சிறப்பாக வீசிய சாஹல் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பின்னர் 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 49வது ஓவரை சமி வீசி 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரில் மே.இ.தீ அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று அணைவரும் எதிர்ப்பார்த்தனர். கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் ஹோப். 2வது பந்து நர்ஸ் காலில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நர்ஸ் 4வது பந்தில் அவுட்டானார். கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஹோப் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி தேடி தருவார் என்று எதிர்பார்த்த நிலையில், யாதவ் பந்தை விலக்கி போட ஹோப் அதைப் பயன்படுத்தி 4 ரன்களை அடித்தார். இதனால் அணியின் எண்ணிக்கை 321 என்றாகி ரன்கள் சமநிலையில் ஆட்டம் முடிந்தது.
உமேஷ் யாதவ் ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement