இன்று 2வது டி20 போட்டி - இந்திய அணிக்கு இன்றைய துவக்க ஆட்டக்காரர்கள் யார் யார்?

இன்று 2வது டி20 போட்டி - இந்திய அணிக்கு இன்றைய துவக்க ஆட்டக்காரர்கள் யார் யார்?


India vs West indies 2nd t20

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 3-0 என ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி முதல் டி20 போட்டியிலும் வெற்றி பெற்றது.

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள எதிரணிகள் சரியான திட்டமிடலுடன் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எந்த விதமான மாற்றங்களுடன் களமிறங்கும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் பெருகியுள்ளது.

ind vs WI

குறிப்பாக கே எல் ராகுல் அணியில் இல்லாத நிலையில் துவக்க ஆட்டக்காரர்களை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக முதல்முறையாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரிடமிருந்து ரன்கள் வரவில்லை.

எனவே இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவே துவக்க ஆட்டக்காரராக இறங்குவாரா அல்லது முதல் போட்டியில் விளையாடிய யாரையேனும் நீக்கிவிட்டு இஷான் கிஷன் மீண்டும் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் ஸ்ரேயஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் ஆடும் லெவலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்கள் நெருங்கும் வேளையில் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களுக்கான குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்திய அணிக்காக 6 வெவ்வேறு ஜோடிகள் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.