தூக்கி வீசப்பட்ட இளம் வீரர்.! மீண்டும் இடம் பிடித்த மூன்று சீனியர் வீரர்கள்.! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.!

தூக்கி வீசப்பட்ட இளம் வீரர்.! மீண்டும் இடம் பிடித்த மூன்று சீனியர் வீரர்கள்.! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.!


india-vs-south-africa-indian-11-members-squad-list

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த மாதம் 12 , 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

சமீபத்தில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி T20 போட்டியை தவிர, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அணைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ind vs sa

இந்நிலையில், விராட்கோலி தலைமையிலான அணி வீரர்களை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக இறங்கிய மயங் அகர்வால் தூக்கி வீசப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சீனியர் வீரர் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் மீட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத ரோஹித் சர்மா இந்த அணியில் இடம்பெறவில்லை.

இளம் வீரர் ப்ரித்வி ஷா தவானுடன் சேர்ந்து தொடக்க வீரராக காலம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

அணி வீரர்களின் விவரம்:

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் அய்யர், கே. எல். ராகுல், மனிஷ் பாண்டே, ரிசப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சாஹல், பும்ரா, சைனி, குல்தீப் யாதவ் மற்றும் ஷுப்மன் கில்.