விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி; தொடருமா இந்திய அணியின் வெற்றிப்பயணம்!

Summary:

india vs newzland first odi

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 t20 போட்டிகள் கொண்ட தொடரை 5 - 0 என்று வென்றது. அதனை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்நது இன்று இந்திய நேரப்படி காலை 7:30 மணியளவில் துவங்குகிறது. ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நியூசிலாந்தின் நேரப்படி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை t20 தொடரில் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை. எனவே எப்படியும் ஒருநாள் போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை தொடர் வெற்றிகளை பெற்ற உற்சாகத்தில் இந்த போட்டியில் களமிறங்குகின்றனர்.

நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இடம்பெறவில்லை. டாம் லதாம் கேப்டனாக உள்ளார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் இருவருமே இந்த தொடரில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களான மயங் அகர்வால் மற்றும் பிரிதிவ் ஷாவ் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என கேப்டன் கோலி ஏற்கனவே அறிவித்துவிட்டார். t20 போட்டிகளில் ஆட்டத்தை துவக்கிய ராகுல் ஒரு நாள் தொடரில் நான்காவது வீரராக களமிறங்கவுள்ளார்.


Advertisement