4 ஓவர்: 2 ரன்: 1 விக்கெட் - தொடக்கத்திலேயே கெத்து காட்டும் இந்திய அணி! பயந்து நடுங்கும் நியூசிலாந்து!

4 ஓவர்: 2 ரன்: 1 விக்கெட் - தொடக்கத்திலேயே கெத்து காட்டும் இந்திய அணி! பயந்து நடுங்கும் நியூசிலாந்து!


India vs new zeland first semi final match update

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டியின் முதல் ஆட்டம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்றுவருகிறது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பந்துவீச்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலையே அசத்தலாக பந்து வீசி வருகிறது. தொடர்ந்து இரண்டு இவர்களில் ஒரு ரன் கொடுக்காமல் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா இருவரும் அசத்தலாக பந்து வீசி வருகின்றனர்.

World cup 2019

மூன்றவது ஓவரில் தனது முதல் ரன்னை பதிவு செய்த நியூசிலாந்து அணி நாங்கத்து ஓவரில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 14 பந்துகள் விளையாடிய குப்தில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

நான்கு ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு ரன்கள், ஒரு விக்கெட் என்ற நிலையில் விளையாடிவருகிறது.