ஆடாமல் ஜெயித்த இந்திய அணி.! விளையாடி வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி.! மகளிர் தினத்தன்று யாருக்கு உலக்கோப்பை..?

ஆடாமல் ஜெயித்த இந்திய அணி.! விளையாடி வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி.! மகளிர் தினத்தன்று யாருக்கு உலக்கோப்பை..?


india-vs-austrelia-final


2020 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மழையால் தடைபட்ட நிலையில், இந்திய மகளிர் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது.

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.


இந்தநிலையில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், போட்டி நிறுத்தப்பட்டு 'ஏ' பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

இதனையடுத்து மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. அந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தநிலையில் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய -இந்திய அணிகள் மோதவுள்ளது. 2020 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் குரூப் சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.