வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
பதறவிட்ட ஆஸ்திரேலியா!! இலக்கை எட்டுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 186 ரன்கள் குவித்துள்ளது.
உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்ததை அடுத்து, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் இறங்கியது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க, டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பாக அக்சர் படேல் 3 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், சாகல், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினார். 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடிவருகிறது.