விராட் கோலி: விஜய் சங்கரை முன்பாகவே பந்துவீச அழைத்து இருப்பேன் இவர்கள் தடுத்து விட்டனர்.!

விராட் கோலி: விஜய் சங்கரை முன்பாகவே பந்துவீச அழைத்து இருப்பேன் இவர்கள் தடுத்து விட்டனர்.!


india-vs-aus-2nd-odi---india-win---viraht-kohli

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்ற நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியிலும் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னா் விராட் கோலி செய்தியாளா்களிடம் பேசுகையில், “நான் பேட்டிங் செய்ய இறங்கியபோது சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கடைசிவரை ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. விஜய் சங்கா் அற்புதமாக விளையாடினாா். ஆனால், துரதிா்ஷ்டவசமாக அவா் ரன் அவுட் ஆனாா்.  

கேதரையும், தோனியையும் அடுத்தடுத்து இழந்தது கூடுதல் நெருக்கடியாக அமைந்தது. பந்து வீச்சின் போது விஜய் சங்கரை 46வது ஓவரில் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், ரோகித் ஷா்மா, தோனி ஆகியோரிடம் ஆலோசித்தபோது இருவரும் பும்ரா, ஷமியை முன்னிருத்தினா். அவா்கள் விக்கெட் எடுத்தால் நமக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று தொிவித்தனா். நானும் அதன் படியே செய்தேன். 

பும்ரா நினைத்தது போன்று சிறப்பாக விளையாடினாா். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். ஆட்டத்தின் போக்கை மாற்றினாா். விஜய் சங்கா் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் வீசி ஆட்டத்தை எளிதாக வைத்துக் கொண்டாா். இறுதி ஓவரில் விஜய் சங்கா் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற வைத்தது தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.  

ஒருநாள் போட்டிகளில் நான் எனது 40வது சதத்தை பூா்த்தி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை விட இந்திய அணி 500வது வெற்றியை பதிவு செய்தது கூடுதல் மகிழ்ச்சி” அளிப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.