IND vs PAK || மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா 147 ரன்கள் குவிப்பு..!! வழிவிடுவாரா வருண பகவான்..?!!

IND vs PAK || மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா 147 ரன்கள் குவிப்பு..!! வழிவிடுவாரா வருண பகவான்..?!!



india-scored-142-runs-for-the-loss-of-3-wickets-in-241

ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்துள்ளது.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.

லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரின் இன்றைய போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி இந்திய அணியின் இன்னிங்ஸை சுப்மன் கில்-ரோஹித் சர்மா ஜோடி தொடங்கியது.

தொடக்கத்தில் ரோஹித் சர்மா பொறுமையாக தொடங்க, பட்டாசாய் வெடித்த சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் பின்னர் ஷதாப்கானின் சுழற்பந்துவீச்சை விளாசிதள்ளிய ரோஹித் சர்மாவும் அரைசதம் கடந்தார். இது அவருக்கு 50வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான தொடக்கம் கண்ட இந்த ஜோடி 16.4 ஓவரில் பிரிந்தது, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. முதலில் 56 (49) ரன்களுடன் ரோஹித் சர்மாவும், அடுத்ததாக 17.5 ஓவரில் சுப்மன் கில் 58 (52) ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இணைந்த விராட் கோலி-கே.எல்.ராகுல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

 24.1 ஓவரின் இறுதியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழையின் குறுக்கீட்டால் போட்டி தடைபட்டது.