வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அணைத்து விக்கெட்டுகளையும் தட்டி தூக்கிய ஆஸ்திரேலியா.!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில்T20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் விருத்திமான் சகா மற்றும் அஸ்வின் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் இரண்டாம் நாளான இன்று, முதல் ஓவரிலே அஸ்வின் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அஸ்வினை தொடர்ந்து சாஹா 9 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 6, ஷமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.