மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
#Breaking: அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா; பதற்றத்தில் இந்திய ரசிகர்கள்.!
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை 2023 போட்டியின் இறுதி தொடர் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததால், இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. போட்டியின் முந்தைய நிகழ்வாக சூரிய கிரண் தலைமையிலான குழுவினர் நிகழ்த்திய வான் சாகசம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அவை உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டியில் இந்தியா தனது முக்கிய விக்கெட்டை இழந்துள்ளது. முதலில் ஹில் 7 பந்துகளில் 4 ரன்கள் அடித்து 5 ஓவரில் வெளியேறிய நிலையில், அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்து 9.4 ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 10 ஓவருக்குள் 2 விக்கெட்டை பறிகொடுத்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்தியாவின் இரண்டு ஒபனர்கள், ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர்.
10.2 ஓவரில் ஸ்ரேயாஸ் தனது தொடக்கத்திலேயே 3 பந்துகளில் 4 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். களத்தில் கே.எல் ராகுல் - விராட் கோலி ஜோடி இருந்தது.
Brilliant Air Show by Indian Air Force above Narendra Modi Stadium.#INDvsAUS #INDvsAUSfinal #WorldCup2023Final pic.twitter.com/yTQ8bm3HHw
— Vineeth K (@DealsDhamaka) November 19, 2023
#WATCH | ICC World Cup Final: Indian Air Force's Surya Kiran Aerobatic Team performs air show over Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat#ICCWorldCup2023 #INDvsAUSfinal pic.twitter.com/An7wHKWGb7
— ANI (@ANI) November 19, 2023