13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
ஆஸ்திரேலியாவுக்கு இந்த நிலைமையா.? தெறிக்கவிட்ட இந்தியா..! தரமான சம்பவம்.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில்T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளான நேற்று அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி நேற்று முதல் இன்னிங்சை துவக்கியது. ஆஸ்திரேலிய அணி 72.1ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்வின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 62 ரன்கள் முன்னிலையோடு உள்ளது. ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க முடியாமல் தடுமாற முக்கிய காரணம் இந்திய அணியின் உமேஷ் யாதவ், பும்ரா பல மெய்டன் ஓவர்களை வீசியது தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எந்த போட்டியிலும் இந்திய அணி இத்தனை மெய்டன் ஓவர்களை வீசி இருக்க முடியாது.