ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4; உள்ளூரில் மொத்தம் 16!!.. தொடரும் இந்திய அணியின் சாதனை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4; உள்ளூரில் மொத்தம் 16!!.. தொடரும் இந்திய அணியின் சாதனை..!



India have won 4 consecutive Tests against Australia

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 4 வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. கடைசி 1 நாள் ஆட்டம் மிச்சம் இருந்த நிலையில் 2 வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி போட்டியை டிரா செய்யும் விதத்தில் விளையாடினர். இதன் காரணமாக ஆட்ட நேரம் முடிவதற்கு முன்பாகவே போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர்.

இதன் மூலம் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 4 வது தொடர் இதுவாகும். இந்திய அணி கடந்த 2017, 2018-19 மற்றும் 2020-21 ஆண்டுகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, அதன் பின்னர் சொந்த மண்ணில் நடந்த 16 தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.