அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோதல்! உறுதியானது இறுதிப் பட்டியல்

அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோதல்! உறுதியானது இறுதிப் பட்டியல்



india-faces-newzland-in-semifinal

2019 உலகக்கோப்பை தொடரில் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடியது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 326 ரன்களை தென் ஆப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது. 

wc2019

ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 20 ஓவர்களில் 3 முக்கியமான விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கவாஜா காயம் காரணமாக வெளியேறினார்.  ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 122 ரன்கள் அடித்தார் அவருக்குப் பின்பு அதிரடியாக ஆட தொடங்கிய அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 315 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. 

இதனை தொடர்ந்து முதல் சுற்றின் முடிவில் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்ற பட்டியலும் உறுதியானது.

wc2019

வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வியாழக்கிழமை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.