இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு இருக்குதுங்கோ..... இது சாத்தியமா.? என்னவெல்லாம் நடக்க வேண்டும்.? முழு விபரம்.!

இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு இருக்குதுங்கோ..... இது சாத்தியமா.? என்னவெல்லாம் நடக்க வேண்டும்.? முழு விபரம்.!



india chances to go semi finale

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நேற்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்தநிலையில், 2021 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெறமுடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுகின்றது. இந்தியாவிற்கு அரை இறுதிக்குத் தகுதி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இனி நடக்கும் போட்டிகளின் முடிவை பொறுத்து தான் உள்ளது.

குரூப் 2 பிரிவில் தற்போது இரண்டு போட்டிகளை இந்தியா விளையாடி முடித்துவிட்ட நிலையில், இந்த பிரிவில் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான், நமீபியா உள்ளிட்ட அணிகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.  

இந்திய அணி இனி நடக்கவிருக்கும் மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் விளையாடவுள்ளது. இனி நடக்கவிருக்கும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் இந்தியாவுக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும். அதேபோல் நியூசிலாந்து அணியும் இதே மூன்று அணிகளுடன்தான் மோதவுள்ளது. பாகிஸ்தான் தனது அரை இறுதியை வாய்ப்பை ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி இனி நடக்கவிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றால் எட்டு புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுவிடும்.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கும் அரை இறுதி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அந்த அணி தான் விளையாடவுள்ள மீதமுள்ள இரு போட்டிகளையும் வெற்றிபெற்றால் நியூசிலாந்து  அணியை பின்னுக்கு தள்ளி எட்டு புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். இந்திய அணிக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் அது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த குரூப் 2- பிரிவில் ஒரு அணியைத் தவிர வேறு எந்த அணியும் புள்ளிபட்டியலில் ஆறு புள்ளிகளுக்கு மேல் பெறக்கூடாது. அப்போதுதான் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலும் அதிகப்படியான நெட் ரன்ரேட் தேவை. இனி நடக்கவிருக்கும் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தாம் விளையாடவுள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோல்வியடைய வேண்டும். அதாவது ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதேபோல் இந்திய அணி ஆப்கனிஸ்தான் அணியை அதிக ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டும்.

மேலும் இந்திய அணி எஞ்சியுள்ள போட்டிகளில் 100 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 10-12 ஓவர்களில் சேசிங் செய்து வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பெரும். ஆனாலும் இது மிகவும் கடினம் தான் என எதிர்பார்க்கப்படுகிறது.