இந்தியா விளையாட்டு

ஐபிஎல்-க்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியா தொடர்! வெளியான முழு அட்டவணை.!

Summary:

ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரை ஆடுகிறது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2020 ஐபிஎல் சீசன் முடிந்தவுடன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரை ஆடவுள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலியா  உறுதி செய்தது.

அதன் படி முதல் ஒருநாள் போட்டி நவம்பர் மாதம் 27-ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக சிட்னியில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து நவம்பர் மாதம் 29-ஆம் தேதி அடுத்த ஒருநாள் போட்டியும் சிட்னியில்தான் நடைபெறுகிறது. 3வது ஒருநாள் போட்டி கான்பெராவில் டிசம்ப்ர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையடுத்து டி20 தொடர் நடைபெற உள்ளது. டி20தொடரின் முதல் போட்டியானது டிசம்பர் 4 ஆம் தேதி கான்பெர்ராவிலும், டி20தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி அன்றும், டி20தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 8 ஆம் தேதி அன்றும் சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இதனையடுத்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது டிசம்பர் 17ஆம் தேதி அடிலெயிடு மைதானத்தில் பகலிரவு போட்டியாக தொடங்குகிறது.இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. சிட்னியில் ஜனவரி 7-11 மூன்றாவது டெஸ்ட்டும் ஜனவரி 15-19 பிரிஸ்பனில் 4வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 


Advertisement