5 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயன்! இந்திய 283 ரன்களுக்கு ஆல் அவுட்

5 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயன்! இந்திய 283 ரன்களுக்கு ஆல் அவுட்


india all out for 283 in 1st innings

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 783 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

2nd test

அதன் பின்னர் முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் துவக்கத்திலேயே அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, புஜாரா ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். பொறுமையாக ஆடிய புஜாரா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி அரைசதமடித்தார். பின்னர் வந்த ரஹானே சிறப்பாக ஆடி அவரும் அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. 

இன்று துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் வந்த வேகத்திலேயே ரகானே 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 25 ஆவது சதத்தை விளாசினார். 

2nd test

கேப்டன் கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 123 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த சமி ரன் ஏதும் எடுக்காமலும், இஷாந்த் சர்மா ஒரு ரன்னிலும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். பின்னர் தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் சிறிது நேரம் நிலைத்து நின்று 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பும்ரா 4 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி முதல் இன்னிங்சில் 43 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் மற்றும் ஹாசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.