இந்தியா vs நியூசிலாந்து: சிறப்பாக முடிந்த 2-வது T20 ஆட்டம்.. முழு தகவல் இதோ..

இந்தியா vs நியூசிலாந்து: சிறப்பாக முடிந்த 2-வது T20 ஆட்டம்.. முழு தகவல் இதோ..


ind-vs-nz-second-t20-latest-updates-in-tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது T20 போட்டியில் விளையாடிவருகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளது. முதல் T20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தல தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இன்றைய இரண்டாவது T20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று T20 தொடரை கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

ind vs nz

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் KL ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடியநிலையில், 65 ரன்கள் எடுத்து KL ராகுல் ஆட்டம் இழந்தார். 55 ரன்களில் ரோஹித் ஷர்மாவும் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

வெங்கேடஷ் ஐயர் மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். 17.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.