#BigBreaking: பெண்கள் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்தியா.. நெருப்பாய் கர்ஜித்த சிங்கப்பெண்கள்.! 

#BigBreaking: பெண்கள் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்தியா.. நெருப்பாய் கர்ஜித்த சிங்கப்பெண்கள்.! 



ind-vs-eng-u19-women-worldcup-cricket-india-victory

 

19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இன்று டி20 உலகக்கோப்பை போட்டித்தொடரில் இன்று இறுதி ஆட்டத்தை விளையாடியது. தென்னாபிரிக்காவில் இந்தியாவும் - இங்கிலாந்து அணிகளும் மோதிக்கொண்டன. 

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து தனது மொத்த விக்கெட்டையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

ind vs eng

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களை குவித்து வெற்றிவாகை சூடினர். இதனால் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனையுடன் வெற்றி அடைந்துள்ளது. 

இந்திய அணியின் சார்பில் விளையாடிய திரிஷா 29 பந்துகளில் 24 ரன்களும், சௌமியா திவாரி 37 பந்துகளில் 24 ரன்களும் அதிகபட்சமாக எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகை  செய்தனர். டிடஸ் சந்து ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.