"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி; தோனி அசத்தல் ஆட்டம்.!
மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். முதல் 10 ஓவரிலேயே பின்ச்(14) மற்றும் கேரி(5) புவனேஷ்வர் பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கவாஜா, மார்ஷ் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் அவர்களால் சாகலின் சுழலை சமாளிக்க முடியாமல் அவுட்டாகினர்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஹ்ன்ஸ்கோம்ப் மட்டும் 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் சுழலில் மிரட்டிய சாகல் 6 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் மற்றும் சமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த எளிதான இலக்கை எட்ட களமிறங்கிய இந்திய அணியின் துவக்க மட்டையாளர்கள் ஆன ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ஆனாலும்
ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அந்நிலையில் அணியின் எண்ணிக்கை 6 ஓவர்களுக்கு 15 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் தவானும் நிலைத்து நின்று ஆட முயன்றனர் ஆனால் தவான் 23 (46 ) ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய கோஹ்லி அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து தோனியும் கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஆடிய அவர்கள் இருவரும் முறையே தோனி 87 , ஜாதவ் 61 ரன்கள் விளாசினர். முடிவில் இந்திய அணி 49.2 ஓவர்களில் வெற்றி இலக்கான 230 ரன்களை எட்டி சிறப்பான வெற்றி பெற்றது.