விளையாட்டு

இனிமேலும் பொறுத்திருக்க முடியாது! நாளை சிஎஸ்கே அணிக்குள் வரும் மாஸ் வீரர்! அதிரடி திருப்பங்கள் காத்திருக்கு.

Summary:

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு ஐபில் சீசனில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. ஏற்கனவே 8 போட்டிகளில் மூன்று போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த சென்னை அணி நேற்றைய போட்டியில் டெல்லி அணியிடம் போராடி தொலைவியடைந்தது. இதனால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களாக சென்னை அணி இறுதி போட்டிவரை செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இம்ரான் தாஹிர்.

ஆனால் அவரால் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடமுடியவில்லை. ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதால் இம்ரான் தாஹிரினால் அணியில் இடம்பெறமுடியவில்லை. ஒருபுறம் வாட்சன் மற்றும் டுப்ளசிஸ் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்துவருவதால் அவர்களை நீக்க முடியவில்லை.

அதேபோல் சாம் கரனும் சிறப்பான பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என சிறப்பாக இருப்பதால் அவரையும் நீக்க முடியவில்லை. இவர்களை அடுத்து அணியில் இருந்த மற்றொரு வெளிநாட்டு வீரர் பிராவோ. இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வந்ததாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு கைகொடுப்பர் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இந்த சீசனில் பிராவோவின் ஆட்டம் சுமாராகவே உள்ளது.

இந்நிலையில்தான் நேற்றைய போட்டியில் பிராவோ காயம் காரணமாக போட்டியில் பாதியிலையே வெளியேறினார். மேலும் அவரால் இனி அடுத்த இரண்டு வாரத்திற்கு விளையாட முடியாது எனவும் கூறப்படுகிறது. இதனால் பிராவோ இடத்தில் நாளைய போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாடலாம் என கூறப்படுகிறது.


Advertisement