ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்.! விராட் வேற லெவல்.! நம்ம ஹிட்மேன் ரோஹித்தும் அசத்திருக்காரு.!

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்.! விராட் வேற லெவல்.! நம்ம ஹிட்மேன் ரோஹித்தும் அசத்திருக்காரு.!


icc test rank

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்சன் உள்ளார். இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரிஷப் ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் கடந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளை நிரூபித்துள்ள நிலையில் முதல் 10 இடங்களில் 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

virat

வங்கதேச அணியின் துவக்க வீரர் தமிம் இக்பால் 3 இடங்கள் முன்னேறி 27வது இடத்திற்கு வந்துள்ளார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 20வது இடத்தில் உள்ளார்.