உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியில்லாமல் வெற்றி; அந்த 2 அணிகள் தெரியுமா?..! அசத்தல் தகவல் இதோ.!

உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியில்லாமல் வெற்றி; அந்த 2 அணிகள் தெரியுமா?..! அசத்தல் தகவல் இதோ.!



icc-cwc-history-without-failure

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

காலனி ஆதிக்கத்தின் கீழ், இங்கிலாந்து அரசாட்சி புரிந்த இந்தியா, ஆஸ்திரேலியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளில் இவை பிரதானமாக வெள்ளையர்களால் விளையாடப்பட்டு வந்து, பின்னாட்களில் உணர்வாகிப்போனது. 

தற்போதைய நிலையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாக விளையாடப்படுகிறது. 

sports

இந்நிலையில், 48 ஆண்டுகளை கடந்த உலகக்கோப்பை வரலாற்றில், மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே தற்போது வரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் உலகக்கோப்பையை தட்டிச்சென்ற அணிகளாக இருக்கின்றன. 

கடந்த 1975 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 2003 - 2007 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியும் உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வெற்றி பெற்றுள்ளது. 

இவ்விரண்டு அணிகளில் ஆஸ்திரேலிய அணி 5 முறை கிரிக்கெட் உலகக்கோப்பையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.