ஐசிசி கிரிக்கெட் விதிமுறையில் அதிரடி மாற்றம்! இனி வீரர்களுக்கு காயப்பட்டால் கவலையே இல்லை

ஐசிசி கிரிக்கெட் விதிமுறையில் அதிரடி மாற்றம்! இனி வீரர்களுக்கு காயப்பட்டால் கவலையே இல்லை



Icc approves concussion substitutes

நேற்று லண்டனில் நடைபெற்ற ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது சப்ஸ்டியூட் அல்லது மாற்று வீரரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்ய அனுமதிப்பது.

இதுவரை நடைமுறையில் இருக்கும் ஐசிசி விதிமுறையின்படி ஆட்டத்தின் நடுவே ஒரு வீரனுக்கு ஏற்பட்டால் பதிலாக மாற்று வீரரை பில்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் தற்பொழுது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பயன்படுத்தவும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

Icc rules

இந்த விதிமுறையின்படி ஆடும் லெவனில் உள்ள ஏதாவது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு போட்டியில் தொடர முடியாது என மருத்துவர் பரிசோதனை செய்து அறிவித்த பின்பு அம்பயரின் அனுமதி பெற்று மாற்று வீரரை களமிறக்கலாம். இதற்கு காயப்பட்ட வீரரும் அனுமதிக்க வேண்டும். இந்த விதிமுறையானது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த விதிமுறையானது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தும்.

மேலும் இனி ஓவர்களை மெதுவாக மற்றும் காலதாமதமாக முடித்தால் அணியின் கேப்டனுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படமாட்டாது.
 மாறாக அனைத்து வீரர்களின் புள்ளிகள் குறைக்கப்படும்.