பரபரப்பான கட்டத்தில் ஐதராபாத்-லக்னோ அணிகள் மோதல்..!! அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு..?!!

பரபரப்பான கட்டத்தில் ஐதராபாத்-லக்னோ அணிகள் மோதல்..!! அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு..?!!



Hyderabad Sunrisers vs Lucknow Supergiants in the 58th League match in Hyderabad

ஐதராபாத்தில் நடைபெறும்  58 வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 57 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும்  58 வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் சன் ரைசர்ஸ் இதுவரை  10 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தை பிடித்துள்ளது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐதராபாத் அணி எஞ்சியுள்ள் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 215 ரன்கள் இலக்கை எட்டிய ஐதராபாத் அணி அந்த உத்வேகத்தை தொடர முயற்சிக்கும்.

லக்னோ அணி இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்ற கணக்கில் 11 புள்ளிகள் பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளது. காயத்தால் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தொடரில் இருந்து விலகிய நிலையில், குருணால் பாண்டியா அந்த அணியை வழிநடத்துகிறார். இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் காண்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் 2 போட்டிகளிலும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க 2 அணிகளுமே மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.