இந்தியா விளையாட்டு Ipl 2019

பரபரப்பான ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பியை கைப்பற்ற வாய்ப்புள்ள வீரர்கள்!

Summary:

highest wicket and scorer list


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 26 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதால் அணைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது.


ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் ஆரஞ்சு தொப்பியை வைத்திருப்பது வழக்கம். இந்தநிலையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் 349 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கும் நிலையில் ஆரஞ்சு தோப்ப்பியை வார்னர் தக்கவைத்துள்ளார்.  பஞ்சாப் வீரர் ராகுல் 317 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். கொல்கத்தா வீரர் ரசல் 302 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். பேர்ஸ்டோவ் 263 ரன்கள் எடுத்து 4வது இடத்தில் உள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரபாடா 13 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் இருந்து பர்ப்பிள் தொப்பியை தக்கவைத்துள்ளார்.  சென்னை அணியின் தீபக் சாகர் 10 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், சென்னை அணியின் இம்ரான் தாஹிர்  9 விக்கெட் வீழ்த்தி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பெங்களூரு வீரர் சகால் 9 விக்கெட் வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.


Advertisement