தோனியின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணியின் கேப்டன்!

தோனியின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணியின் கேப்டன்!


Harmanpreet Kaur surpasses dhoni

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனை ஒன்றினை இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீட் கௌர் முறியடித்துள்ளார்.

நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணியினர் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Harmanpreet Kaur

இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் டி20 போட்டிகளில் கேப்டனாக தனது 42வது வெற்றியை அடைந்தார். 71 போட்டிகளில் கேப்டனாக தலைமையேற்றுள்ள ஹர்மன்பிரீட் கவூர் 42 வெற்றி, 26 தோல்விகளை சந்தித்துள்ளார். மூன்று போட்டிகளில் முடிவுகள் தெரியவில்லை.

இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 72 போட்டிகளில் 41 வெற்றிகளையும் 28 தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஒரு போட்டி டையிலும் இரண்டு போட்டிகளின் முடிவுகளும் தெரியவில்லை. தற்போது தோனியை மிஞ்சியுள்ள ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டனாக உருவெடுத்துள்ளார்.