நிறைமாத கர்ப்பிணியாக செஸ் போட்டியில் ஆடி இந்திய அணிக்கு பெருமை சேர்த்த ஹரிகா துரோணவள்ளி.! என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா.?

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் போட்டியில் ஆடி இந்திய அணிக்கு பெருமை சேர்த்த ஹரிகா துரோணவள்ளி.! என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா.?



Harika dronavalli got delivery

மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் கடந்த மாதம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் , செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றன. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய அணியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கணை ஹரிகா துரோணவள்ளி பங்கேற்று விளையாடினார்.

உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ள ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஹரிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

செஸ் ஆடிய போது நாற்காலியில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் அவர் சிரமப்பட்டார். சிரமத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆடிய அவர், இந்திய ஏ அணி வெண்கல பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் ஹரிகா துரோணவள்ளிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.