காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்ட்யா! குழந்தை போல் தத்தளித்து நடக்கும் வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்ட்யா! குழந்தை போல் தத்தளித்து நடக்கும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து சிகிச்சைக்காக லண்டன் சென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு அங்குள்ள மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான உடற்பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதுபற்றி வீடியோ பதிவு ஒன்றை அவரது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சிறு குழந்தையின் நடைகள்... ஆனால் முழு உடற்தகுதிக்கான எனது பயணம் இங்கிருந்தே ஆரம்பமாகிறது. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo