நட்புனா இப்புடி இருக்கனும்.. அணி மாறினாலும் பாசம் மாறவில்லை.. ஹார்டிக் பாண்டியாவிற்கு பொல்லார்ட் உபசரிப்பு..!

நட்புனா இப்புடி இருக்கனும்.. அணி மாறினாலும் பாசம் மாறவில்லை.. ஹார்டிக் பாண்டியாவிற்கு பொல்லார்ட் உச்சரிப்பு..!


hardik-pandya-met-pollard-family

ஐபிஎல் தொடரானது வெவ்வேறு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை வாழ்நாள் நண்பர்களாக்கியுள்ளது. கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இன்றும் நல்ல நண்பர்களாக உள்ளனர். அதேபோல் தான் ஹார்டிக் பாண்டியாவும் பொல்லார்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய ஹார்டிக் மற்றும் பொல்லார்ட் நல்ல நண்பர்களாக இன்றும் இருந்து வருகின்றனர். புதிய அணி குஜராத் டைட்டன்ஸ் உருவாக்கப்பட்டதால் ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக வேண்டிய அவசியம் உருவானது. இதனால் 2022 ஐபிஎல் தொடரில் இருவரும் பிரிந்தனர்.

Hardik pandya

இருந்தாலும் தற்போது மேற்கு இந்திய தீவுகளில் விளையாடி வரும் இந்திய அணியில் உள்ள ஹார்டிக் பாண்டியா தனது நெருங்கிய நண்பரான பொல்லார்டின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாண்டியா.

அந்த பதிவில், "கரீபியன் தீவிற்கு சென்றுவிட்டு பொல்லார்டை சந்திக்காமல் வந்தால் அந்த பயணமே முழுமை பெறாது. பொல்லார்ட் எப்போதும்‌ என்னோட‌ ஃபேவரைட், அவரது அழகான குடும்பத்துடன் எனக்கு உபசரிப்பு செய்ததற்கு‌ மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.