தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய கப்டில்.. விட்டதை பிடிப்பாரா ரோகித்..!
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுவரை 128 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3379 ரன்கள் எடுத்துள்ளார். நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்டில் 40 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய கப்டில் 116 போட்டிகளில் 3399 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நாளை துவங்க உள்ள நிலையில் ரோகித் சர்மா மீண்டும் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் 99 போட்டிகளில் 3308 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலியும் நான்காவது இடத்தில் 2894 ரன்கள் எடுத்துள்ள ஸ்காட்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங்கும் உள்ளனர். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பின்ச் 2855 ரன்களில் உள்ளார்.