மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
குப்புற கவிழ்ந்த மும்பை இந்தியன்ஸ்..!! 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்..!!
மும்பை அணிக்கு எதிரான 35 வது லீக் போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 35 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா-சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்க வீரர் விருத்திமான் சஹா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெறியேறிய நிலையில், சுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 13, பின்னர் வந்த விஜய் சங்கர் 19 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்ன கைகோர்த்த டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தனர்.
அபினவ் மனோகர் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரென்ட்ரவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 208 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் 2, இஷான் கிஷன் 13, திலக் வர்மா 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே வெளியேற, சிறிது நேரம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 23, பியூஸ் சாவ்லா 18 , வதோரா 40, அர்ஜீன் டெண்டுல்கர் 13 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.