ராஜஸ்தானை ஊதித் தள்ளிய குஜராத்..!! பிரம்மாண்ட வெற்றியுடன் முதலிடத்தை தக்க வைத்து அசத்தல்..!!

ராஜஸ்தானை ஊதித் தள்ளிய குஜராத்..!! பிரம்மாண்ட வெற்றியுடன் முதலிடத்தை தக்க வைத்து அசத்தல்..!!


gujarat-titans-won-the-46th-league-match-against-rajast

ராஜஸ்தான் அணிக்கு எதிரான 46 வது லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு ஜெய்பூரி நடந்த 48 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை தொடங்க ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடி களமிறங்கியது. தொடக்க ஜோடியில் பட்லர் 8, ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 30, அஸ்வின் 2, ரியான் பராக் 4, தேவ்தத் படிக்கல் 12, சிம்ரன் ஹெட்மயர் 7, ஜீரைல் 9 ரன்களுக்கு தொடர்சியாக விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாத ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து, 120 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா-சுப்மன் கில் ஜோடி இன்னிங்ஸை துவங்கியது. சிறப்பான தொடக்கம் அளித்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 39 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

17.5 ஓவர்களில் இலக்கை எட்டிய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா 41 ரன்கள் சேர்த்து உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் குஜராத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது.