மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஹாட்ரிக் அடித்த ரஷீத்கான்..!! கடைசி ஓவரில் 5 சிக்ஸர் அடித்து திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா..!!
குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத் மைதானத்தில் தொடங்கிய 13 ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில், ரஷித் கான் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது.
4.2 ஓவர்களில் 32 ரன்கள் சேர்த்த போது 17 ரன்களில் சஹா ஆட்டமிழந்து வெளியேற, சாய் சுதர்ஷன் களமிறங்கினார். இந்த ஜோடியில் 39 ரன்கள் சேர்த்த சுப்மன் கில், சுனில் நரேன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் 14 ரன்களில் வெளியேற, மறு முனையில் அதிரடிகாட்டிய சாய் சுதர்ஷன் 53 (38) அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.
இதற்கிடையே களமிறங்கிய விஜய் சங்கர் அதிரடியாக மட்டையை வீசி 21 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியதோடு, ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அமர்களப்படுத்தினார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு, 204 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அணி தரப்பில் விஜய் சங்கர் அதிகபட்சமாக 63 (24) ரன்களும், சாய் சுதர்ஷன் 53 (38) விளாசினர். கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3, சர்மா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 205 ரன்கள் மெகா இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ்-ஜெகதீஸ் ஜோடி ஏமாற்றம் அளித்தது. இம்பாக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியில் மிரட்ட, கேப்டன் ராணாவும் கோதாவில் குதிக்க கொல்கத்தா வேகமாக மீண்டு எழுந்தது.
17 வது ஓவர் வரை வெற்றிநடை போட்ட கொல்கத்தா அணிக்கு 18 வது ஓவரில் ரஷீத்கான் முட்டுக்கட்டை போட்டார். ஆந்த்ரே ரசூல், சுனில் நரேன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
6 பந்துகளில் 29 ரன்கள் எடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் ரிங்கு சிங்-உமேஷ் யாதவ் ஜோடி களத்தில் இருந்தது. கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.