வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
நேற்றைய ஆட்டத்தில் கெயிலுக்கு நடந்த துரதிஷ்டம்!! வைரல் வீடியோ!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 37 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயித்த 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி அரைசதத்தை கடந்தார். அப்போது ஆட்டத்தின் 12.2-வது பந்தை கெயில் சிக்ஸருக்கு அடித்த போது, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த இங்கிராம் அற்புதமாக கேட்ச் செய்து, உடனடியாக அக்ஷரிடம் தூக்கி போட, அதை அக்ஷர் கேட்ச் பிடித்து கெயிலை அவுட்டாக்கினார்.
நேற்றைய ஆட்டத்தில் நடந்த இந்த அற்புதமான கேட்ச் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.